அனைவர்க்கும் புத்தாடை !

இளவேனில் தொடங்கும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என கடைபிடிக்கப்பட்ட வாழ்வுமுறை தமிழருக்கு உரியது. அதன் பிரகாரம் தமிழர் தம் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மருத்துநீர் வைத்து புத்தாடை அணிந்து ஆலயம் சென்று பெரியவர்களிடம் கைவிசேடம் பெறுவது மரபாகும்.

அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் எமது மாணவர்களுக்கான புத்தாடைகளை சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் வழங்கிவருகின்றது.

அவ்வாறே பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டிற்காக மட்டக்களப்பு, மற்றும் முல்லைத்தீவில் அமைந்துள்ள சிறுமிகள் பராமரிப்பு நிலையங்கள், ஏனைய எமது திட்டத்துடன் இணைந்துள்ள மாணவிகளுக்கான புத்தாடைகளை வழங்கி அவர்களையும் மகிழ்விக்கும் வண்ணம் தாங்கள் முன்வந்து செய்யும் சிறு பங்களிப்பானது பெரும் உதவியாக அமையும்.

அந்தவகையில் கிட்டத்தட்ட 100 மாணவர்களிற்கான உதவியினை வேண்டிநிற்கின்றோம். ஒரு மாணவருக்கு 5000 LKR ( $15) மட்டுமே. உங்களால் முடிந்தளவான மாணவர்களிற்கு உதவிடுங்கள்.

வருடத்திற்கு 4 தடவைகள் இவ்வாறான மாணவர்களையும் மகிழ்விக்க புத்தாடைகள் வழங்கி வைக்கின்றோம்.

  1. தைப்பொங்கல்
  2. சித்திரை வருடப்பிறப்பு
  3. தீபாவளி
  4. கிருஸ்மஸ்

தொடர்புக்கு : http://wa.me/+94776770780

நன்கொடைகள் வழங்கிட

Donate Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *