விழுதுகள் !

” நீ செய்த தவறுகளை வாழ்த்து; அவைகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டுகின்றது.” என்னும் சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்கிணங்க வலிகளும் ஆயிரம் தடைகளும் கடந்து அனுபவங்கள் மூலம் பாடங்கள் பலகற்று, படிப்படியாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை நிறுவனமானது 2019.04.17 ஆம் திகதி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட தனது ஐந்தாவது ஆண்டு நிறைவினை இனிதே கடக்கின்றது. எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் எமது திட்ட முகாமையாளர் திரு.சு.ராஜு கபீரியல் அவர்களின்…

மேலும் படிக்க

அனைவர்க்கும் புத்தாடை !

இளவேனில் தொடங்கும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என கடைபிடிக்கப்பட்ட வாழ்வுமுறை தமிழருக்கு உரியது. அதன் பிரகாரம் தமிழர் தம் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மருத்துநீர் வைத்து புத்தாடை அணிந்து ஆலயம் சென்று பெரியவர்களிடம் கைவிசேடம் பெறுவது மரபாகும். அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது எமது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் எமது மாணவர்களுக்கான புத்தாடைகளை சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் வழங்கிவருகின்றது. அவ்வாறே பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டிற்காக மட்டக்களப்பு, மற்றும் முல்லைத்தீவில் அமைந்துள்ள சிறுமிகள் பராமரிப்பு…

மேலும் படிக்க

நாளைய தலைவர்களுக்காய், நாம் !

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் பின் தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த உதவித்தொகையொன்றினை வழங்குவதன் மூலம் அவர்களது கல்விக்கான எமது பங்களிப்பை வழங்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் திரு.சுப்பிரமணியம் ராஜு கபீரியல் அவர்கள்…

மேலும் படிக்க

ஜீவானந்தா.. பெண்களுக்காய் ஓர் இல்லம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது ஆறு திட்டங்களினூடாகப் பல்வேறு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத்திட்டம் மற்றும் விசேட தேவையுடையோர்க்கான திட்டங்களின் மூலம் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் எமதுbபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 10 சிறுமிகள் மற்றும் 10 முதியவர்களை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு எமது மாணவர்களைப்…

மேலும் படிக்க

உதவி கோரல்

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பின் தங்கிய கிராமப் பிரதேசத்திலுள்ள மாணவர்களின் கல்விக்கான உபகரணங்களை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வருடந்தோறும் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் தொடர் தேர்ச்சியாக வழங்கி வருகின்றது. அதற்கிணங்க பாடசாலை ஆரம்பிக்கப்படவிருப்பதால் எமது மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் தாங்கள் முன்வந்து வழங்கும் சிறு உதவியானது (LKR 5,000) வறுமைக்கோட்டின்…

மேலும் படிக்க

சிலம்பம் ஓர் மறைந்த அத்தியாயம் !!

தொன்று தொட்டு வந்த தமிழர் மரபென இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் அடையாளப்படுத்தப்பட்டுப் பரந்து விரிந்து பல கலைஞர்களாலும் கையாளப்பட்டு இன்றைய கால ஓட்டத்தில் மருவி வந்த தற்காப்புக்கலைகளில் சிலம்பம் முக்கியம் பெறுகின்றது. ஆண், பெண் பேதமின்றி இன்றைய காலகட்டத்தில் சிலம்பம் பல பிரதேசங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதற்கிணங்க எமது மரபுக் கலைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் பாரிய கடமை எமக்குள்ளது. அந்த வகையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக ஸ்தாபிக்கப்பட்ட முல்லைத்தீவு…

மேலும் படிக்க

உதவி கோரல்

எமது தமிழர்கள் பாரம்பரியமும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில்களை புரிபவர்கள் புது வருடத்தினை வரவேற்பதுடன் இந்த உலகிற்கு ஒளியினையும் சக்தியினையும் கொடுக்கும் சூரியபகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் பொங்கல் பண்டிகை எதிர்வரும் 15 ஆம் திகதி வருகின்றது. தற்போதைய உலக, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தற்போது இலங்கையில் நிலவும் வெள்ள அனர்த்தத்தாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகளே… எனவே இந்த வருடம் பொங்கல் பண்டிகையினை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற வகையில் மட்டக்களப்பு மற்றும் முல்லைதீவு…

மேலும் படிக்க

பல தலைமுறைகள் தாண்டியதோர் நிலைத்திருப்பு, உங்கள் பெயரால் ஓர் மரம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனிமனித வலுவூட்டலினூடாக சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.அவ்வாறே இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக பூமியைக் குளிர்விப்பதற்காக பசுமைப்புரட்சி எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் நடுதல் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக குறைந்தது 500 மரக்கன்றுகளையாவது நடுதல் அல்லது வழங்குதல் மூலம் இந்த ஆண்டிற்கான செயற்பாடாக முன்னெடுக்க வேண்டுமென்ற திட்டத்திற்கிணங்க அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜனன தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் எமது புதிய திட்டமானது அமுல்படுத்தப்பட்டது….

மேலும் படிக்க

அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அவர்களுடன் நாம்

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் வகுப்பறை முக்கிய பங்காற்றுகின்றது. அந்த வகையில் நாளைய தலைவர்களை உருவாக்குவதில் பாலர் பாடசாலைகள் முக்கியம் பெறுகின்றது. போதியளவு உணவு, கல்வி அறிவு, மேலதிக செயற்பாடுகள் என முறையான மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்யும் பாலர் பாடசாலைகளுடன் கைகோர்த்து செயற்படுவது எமது தலையாய கடமையாகும் அந்த வகையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டத்தினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இந்த வருடத்திற்குரிய கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது….

மேலும் படிக்க

ஒரு நாள் உணவும் விசேட நினைவு தினமும்…

தங்களிற்கு எமது பராமரிப்பின் கீழ் உள்ள இல்லங்களில் தங்கியுள்ள மாணவிகள், பாலர் பாடசாலையில் உள்ள சிறுவர்கள், விசேட தேவையுடையோர் நிலையங்களில் உள்ள உடல், உள வளர்ச்சி குன்றிய சிறார்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள கைவிடப்பட்ட முதியவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்கள் விசேட நினைவு தினங்களில் நீங்கள் வழங்கும் உதவி மூலமாக இவர்களிற்கான ஒரு நாள் உணவு கிடைப்பதுடன் இவர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கின்றது. இதற்காக உங்களிற்கான நல்வாழ்வினை இறைவன் வழங்குவார் என்பதுடன் நாமும்…

மேலும் படிக்க